சென்னையில் கணினி ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த பிஎஸ்சி மாணவர் மர்ம சாவு-வீடியோ
சென்னை: தாம்பரம் அருகே ஆசிரியையுடன் வீட்டை விட்டு ஓடிய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீச்சரின் கணவர் அவரை கொலை செய்திருக்ககூடும் என மாணவரின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகிறார்கள்.
தாம்பரம் அருகேயுள்ள, கவுரிவாக்கத்திலுள்ள ஒரு கல்லூரியில், பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்த மாணவர் அரவிந்த் குமார். இவருக்கும், கணினி ஆசிரியை கனிமொழிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மணமான கனிமொழியுடன், கடந்த 16ம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார் அரவிந்த் குமார்.
இதையடுத்து, ஆசிரியை மற்றும் மாணவர் ஆகிய இரு வீட்டு தரப்பும், சேலையூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், 18ம் தேதி கனிமொழி மட்டும் வீடு திரும்பியுள்ளார். கடந்த ஞாயிறன்று, சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே, அரவிந்த்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து அரவிந்த்குமார் குடும்பத்தார் கூறுகையில், ஆசிரியையுடன் ஓடிய நாள் முதல் அரவிந்த் இறந்த நாள்வரையில் என்ன நடந்தது என்பதே புரியவில்லை. ஆசிரியை திரும்பி வந்ததும், அவரை விசாரிக்குமாறும், அரவிந்த் திரும்பும்வரை அவரை வெளியே விடக்கூடாது என்றும் போலீசில் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால் போலீசாரோ, ஆசிரியையை வெளியே விட்டால்தான், அரவிந்த் அவருக்கு போன் செய்வார், அவரது செல்போன் எண்ணை வைத்து பிடித்துவிடலாம் என்று கூறி மெத்தனமாக விட்டுவிட்டனர் என்று குற்றம்சாட்டினர்.
ஆசிரியையின் கணவர், ஏற்கனவே அரவிந்த்தை மிரட்டியிருந்ததாகவும் குடும்பத்தார் கூறுகிறார்கள். எனவே இது கொலையா, விபத்தா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications