சென்னையில் 9 இடங்களில் சரவண பவன் ஹோட்டல்களுக்கு சீல் வைப்பு- மாநகராட்சி அதிரடி!!
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை உள்பட 9 சரவண பவன் ஹோட்டல்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
சென்னை: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஹோட்டல் உள்பட அதன் 9 கிளைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கேகே நகரில் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது சரவண பவன் ஹோட்டல். தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது சரவண பவன் ஹோட்டல்.

இதன் உரிமையாளர் ராஜகோபால் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2வது, 3வது திருமண விவகாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர். கொலை வழக்கிலும் சிறைக்கும் போயிருந்தார். இருந்தபோதும் இந்த சர்ச்சைகளால் அவரது ஹோட்டல் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

வழக்கம் போல சரவண பவன் ஹோட்டல் கொடி கட்டிப் பறந்தது. இந்த நிலையில் இன்று திடீரென சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் கிளைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக கூறி அதை பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைத்து இழுத்து மூடினர். அதேபோல் சரவணபவன் ஹோட்டலுக்கு சொந்தமான 9 கிளை ஹோட்டல்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒரே நேரத்தில் சரவண பவன் ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications