சென்னை ஜி.எச் பயிற்சி மருத்துவர்களின் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் விமலாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பயிற்சி மருத்துவர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மர்மநபர்களால் வெட்டப்பட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த சக்திவேல் (26) என்பவரை நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த டாக்டர்களிடம் (முதுநிலை மருத்துவ மாணவர்கள்) சக்திவேலுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளனர்.

அவர்கள் நோயாளி ஒருவரை பார்த்து முடித்த பிறகு வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேலின் உறவினர்கள், மருத்துவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 4 பேரை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும் என்று கூறி பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்களைத் தாக்கிய நபர்களைப் போலீசார் கைது செய்ய வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவிற்கு ஆயுதம் ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை டீன் ஆர்.விமலா, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழுவின் தலைவரான கார்த்திக்கேயன் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டீன் விமலா, ‘மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் உறுதி அளித்திருப்பதாகவும், மருத்துவர்களைத் தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும்' அவர் தெரிவித்தார்.
ஆனால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது தற்காலிகமானது தான் என்றும், போலீசார் அளித்த உறுதிமொழியின் படி தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம் என்றும் போராட்டக்குழுவின் தலைவர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications