இன்று காணும் பொங்கல்… சென்னையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளதால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மெரினா கடற்கரை, திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் முடிந்த அடுத்த நாளான காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் அனைவரும் மெரினா கடற்கரை, அண்ணா உயிரியல் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது வழக்கம். இன்று காணும் பொங்கல் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்தப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவார்கள். கடற்கரை முழுவதும் பொதுமக்களின் கூட்டம் கட்டுங்கடங்காத அளவுக்கு இருக்கும். இதற்காக மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு தற்காலிகமாக ஒரு காவல் கட்டுப்பாட்டு அறையும், காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் போலீசார்
இதேபோன்று பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கேளிக்கை பூங்காக்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கண்காணிப்பு கோபுரங்கள்
மெரினாவில் உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் மணல் பரப்பில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மீதேறி நின்றபடி, 3 போலீசார் கூட்டத்தை கண்காணிப்பார்கள்.

கடலில் குளிக்கத் தடை
மேலும், இளைஞர்கள், குழந்தைகள் ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கி விளையாடுவார்கள். அப்போது, அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு வேலிகள்
மேலும், பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுப்பதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும் கூட்டத்தைக் கண்காணிக்க குதிரைப்படை வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும், கடற்கரை மணலில் எளிதாக செல்லக் கூடிய வகையிலான 10 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து போலீசார் சுற்றி வருவார்கள்.

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
இதே போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications