சென்னைக்கு அடுத்த வருஷம் 'சுத்தமான' கரண்ட் வரப் போகுதாம்...!
சென்னை: சென்னை நகரில் அடுத்த வருடம் மின் விநியோகம் சீராகப் போகிறதாம். மேலும் தரமான மின்சாரம் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாம். டான்ஜெட்கோ இதைத் தெரிவித்துள்ளது.
மின் விநியோக கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர்களை டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி, விநியோகக் கழகம் பரிசீலித்து வருகிறாம்.
டெண்டர் இறுதியானதும் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த வருடம் சென்னை நகருக்கு தங்கு தடையில்லாத, தரமான மின்சாரம் கிடைக்குமாம்.

டெண்டர் கோரிய 8 நிறுவனங்கள்
டான்ஜெட்கோவின் மின் விநியோக கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் 8 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

சென்னை வடக்கும், தெற்கும்
டான்ஜெட்கோவின் திட்டப்படி சென்னை வடக்கு மற்றும் தெற்கில் மின் விநியோக கட்டமைப்பு வலுப்படுத்தப்படவுள்ளது. அதற்காகத்தான் இந்த டெண்டர் விடும் பணி.

இப்போதைக்கு அசோகா பில்ட்கான்
இப்போதைக்கு அசோகா பில்ட்கான் நிறுவனம் குறைந்த விலைக்கு டெண்டர் கேட்டுள்ளதாம். இருப்பினும் பல்வேறு அம்சங்களையும் பரிசீலித்த பின்னர் டெண்டர் இறுதி செய்யப்படுமாம்.

ரூ. 609 கோடி திட்டம்
ரூ. 609 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. புதிய துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படவுள்ளன. புதிய மின் கம்பங்கள் நடப்படவுள்ளன. மேலும் பல மேம்பாட்டுப் பணிகளும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளனவாம்.

வடக்கில் 15 மின் நிலையங்கள்
புதிய திட்டத்தின்படி 23 புதிய மின் துணை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் வடக்கு சென்னையில் மட்டும் 15 வருகிறதாம்.

1500 டிரான்ஸ்பார்மர்கள்
சென்னை நகர் முழுவதும் கிட்டத்தட்ட 1500 புதிய டிரான்ஸ்பார்மர்கள் இந்தப் பணியின்போது நிறுவப்படவுள்ளதாம்.

9 மாதத்தில் வேலை முடியும்
9 மாதங்களில் இந்த மேம்பாட்டுப் பணிகள் முடிவடையுமாம்.

இனி தங்கு தடையில்லாத மின்சாரம்
இந்தப் பணிகள் முடிந்த பின்னர் சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கு தடையில்லாத மின்சாரம் விநியோகம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications