ரோட்டுப் பக்கம் புதுசா ஒரு கடையும் திறக்கக் கூடாது.. ஹைகோர்ட் அதிரடி
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க
தடை விதித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள்பட்ட கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்திலும் ஆயிரக்கணக்கான மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி மற்றும் ஊரக சாலைகளாக மாற்றி சண்டீகர் அரசு புதிய மதுக்கடைகளை திறந்தது.

அதிகாரம் உண்டு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உள்ளாட்சி அமைப்புக்குள்...
இதேபோல் பிற மாநிலங்களும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறந்தன. இதையடுத்து தமிழக அரசும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புக்குள் கொண்டு 800 புதிய டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

டாஸ்மாக் கடை திறப்பு
அந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தரம் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கூறுகையில் உச்சநீதிமன்ற உத்தரவை தவறாக புரிந்து கொண்டு மாநில அரசு டாஸ்மாக் திறக்கிறது என்று கூறினார்.

புதிய கடைகளுக்கு தடை
இதையடுத்து தமிழக அரசு முன்வைத்த வாதத்தில் , உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற பதில் வரும் வரை புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications