திமுக எம்.எல்.ஏக்களுக்கான உரிமை குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் தடை
திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது சட்டசபைக்கு அந்த பொட்டலங்களை கொண்டு சென்றனர். தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.

திமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
அதன்படி உரிமை குழு கூட்டம் கூடியது. அதில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரினார்.

ஹைகோர்ட்டில் வழக்கு
அத்துடன் சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் ஹைகோர்ட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்ந்தார். தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் போலீஸ் உதவியோடு விற்பனை செய்கிறார்கள். இதை நிரூபித்த திமுக உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

வாதாடிய கபில்சிபல்
அந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார்.

இடைக்கால தடை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கானது செப்டம்பர் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications