பேனர்களை அகற்றாமல் காவல் துறை என்ன செய்கிறது?: ஹைகோர்ட் சரமாரி கேள்வி
பேனர்களை இன்னும் அகற்றாமல் காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பேனர்களை இன்னும் அகற்றாமல் காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி உள்ளிட்ட பேனர்கள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

நீதிமன்றம் விசாரணை
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடுத்த புகார்களை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இன்னும் ஏன் அகற்றவில்லை?
அப்போது தலைமை நீதிபதி, போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாமல் காவல் துறை என்ன செய்துக் கொண்டிருக்கிறது? பேனர்களை அகற்றாமல் இன்னும் ஏன் அனுமதி தரப்படுகிறது?

சென்னையில்...
கிரின்வேஸ் சாலை முதல் உயர் நீதிமன்றம் வரைதான் பேனர்கள் இல்லை. சென்னையின் மற்ற இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

5-ஆம் தேதி அறிக்கை
விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். பேனர்களை அகற்றாதது தொடர்பாக தமிழக அரசு, காவல்துறை, மாநகராட்சி வரும் 5-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு











Click it and Unblock the Notifications