தமிழக அரசின் தவறால் நீட் தேர்வில் தேர்ச்சி குறைவு... மத்திய அரசுக்கும் ஹைகோர்ட் குட்டு
தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக செய்த தவறால் நீட் தேர்வில் 9 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சென்னை: 10 ஆண்டுகளாக பாடத்திட்டங்களை மாற்றாததால் நீட் தேர்வில் 9 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசுதான் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி, கிருத்திகா என்பவர், மாநில பாடத் திட்டத்தில் பயின்று 199.25 கட் ஆஃப் பெற்றார். ஆனால் நீட் தேர்வில் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.
எனவே தற்போது நடைபெறும் கலந்தாய்வில் தன்னை இணைத்துக் கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கடந்த 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காதது ஏன். கற்பிக்கும் முறையையும் மாற்றி அமைக்காதது ஏன்.
சிபிஎஸ்இயை தேர்வு நடத்தும் நிறுவனமாகவும், வினாத்தாள் தயாரிக்கும் உரிமையும் வழங்கியது யார். சிபிஎஸ்இ தரத்திலான கேள்விகளை எப்படி மாநில பாடப்பிரிவு மாணவர்களால் எதிர்கொள்ள முடியும். மாணவர்கள், பெற்றோர் பாதிப்பிற்கு முழு காரணம் மாநில பாடத்திட்டமே என்றார் அவர்.
இந்நிலையில் கிருத்திகாவின் வழக்கில் இன்று நீதிபதி கிருபாகரன் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகளால் தமிழக அரசால் நீட் தேர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. வெறும் மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வு எழுதிய 9 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் நீட் தேர்வுக்கு விலக்களிக்க முடியாது என்று கடைசி நேரத்தில் மத்திய அரசு கூறியதும் ஏற்புடையதல்ல என்றார். எனினும் நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால் மாணவி கிருத்திகாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications