மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டாஸ் பாயும்... ஹைகோர்ட் உத்தரவு
மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாபு என்பவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேடியம்மாள் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், ராமதிலகம் ஆகியோர் மணல் கடத்தல் கும்பலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கடத்தல் விவகாரத்தில் சட்டத்தை மீறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது. மணல் கடத்தல்காரர்களை இது வரை குண்டாஸில் கைது செய்யாதது ஏன்.
அதிகாரிகளின் துணையின்றி மணல் கடத்தல் சாத்தியம் இல்லாததால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் மீது துறை ரீதியாக தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு வாரத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications