சர்க்கார் பட போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி.. நடிகர் விஜய்க்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்!
சர்க்கார் பட போஸ்டரில் வெளியான புகைப்பிடிக்கும் காட்சி குறித்து பதிலளிக்க நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: சர்க்கார் பட போஸ்டரில் வெளியான புகைப்பிடிக்கும் காட்சி குறித்து பதிலளிக்க நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்க்கார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.
இதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி வெளியாகியிருந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புகைப்பிடிக்கும் காட்சி
இந்நிலையில் சர்க்கார் பட போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலா ரூ.10 கோடி இழப்பீடு
அதில் புகைபிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்திய நடிகர் விஜய், இயக்குநர் ஏர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி அமர்வு
மேலும் அந்த பணத்தை வசூலித்து அடையாறு புற்றுநோய் மையத்திடம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விஜய்க்கு நோட்டீஸ்
அப்போது புகைப்பிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுகளுக்கு நோட்டீஸ்
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications