சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு பாடலை மொழி பெயர்த்து தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு பாடலை மொழி பெயர்த்து தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம். பொங்கலுக்கு வெளியான இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ளது 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல்.

எதிராக வழக்கு
இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைதுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலில் உள்ள சில வரிகளை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

விரட்டி விரட்டி வெளுக்க..
அதாவது சொடக்கு மேல சொடகுக்கு போடுது பாடலில் உள்ள "அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது" என்ற வரிகள் வன்முறையை தூண்டும் விதத்திலும், அரசியல்வாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகவும், இந்த வரிகளை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும்
மேலும் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலில் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் வரிகள் உள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க..
எனவே, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு அப்போது சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications