தமிழக அரசின் புதிய விதிகள் படி மனைகளை பத்திரப் பதிவு செய்யலாம்.. தடையை தளர்த்தியது ஹைகோர்ட்!
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டவிதிகளின் படி பத்திரவுப் பதிவு மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டவிதிகளை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி பத்திர பதிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன. வீட்டு வசதி வாரிய துறை சார்பில் இரண்டு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி 20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தால் வீட்டு மனையாக மாற்றக்கூடாது எனவும் தமிழக அரசு கூறியிருந்தது.. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகளும் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து வேளாண்மை செய்ய ஏற்ற நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றமுடியாது. விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண் இயக்குனரின் ஒப்புதல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீட்டுமனையாக மாற்றக்கூடாது.
கோயில் நிலங்கள், வக்ஃபு வாரிய நிலங்களை வீட்டு மனையாக மாற்றமுடியாது. உரிமம் இல்லாத காலி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை என்பன உள்ளிட்ட பல புதிய விதிகளை தமிழக அரசு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டவிதிகளை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி அரசின் புதிய சட்டவிதிகளின் படி பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2016 அக்டோபர் 20க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை மறுவிற்பனை செய்யலாம் எனவும், நீதிமன்றம் தடைவிதித்திருந்த காலத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது அனுமதிக்கப்படும் பத்திரப்பதிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை. மேலும் இதுதொடர்பான வழக்கு ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications