2011ல் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும்- 6 ஆண்டுகளுக்குப் பின் ஹைகோர்ட் தீர்ப்பு
2011 சட்டசபை தேர்தலில் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 தேர்தலில் ஸ்டாலின் 68,677 வாக்குகளும், துரைசாமி 65,943 வாக்குகளும் பெற்றனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஸ்டாலின் வென்றதாக சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியி்ட்ட சைதை துரைசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 6 ஆண்டுகாலமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக மு.க.ஸ்டாலினும், சைதை துரைசாமியும் பலமுறை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் நேரில் ஆஜராகி,கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் மு.க.ஸ்டாலின் தரப்பில் செய்யப்பட்ட தேர்தல் செலவு கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2016 சட்டசபைத் தேர்தலிலும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications