கெடுபிடிகளை தாண்டி, மோடிக்கு எதிரே கறுப்பு கொடியை காட்டிய ஐஐடி மாணவர்கள்!
பிரதமரின் கண்ணில் கறுப்பு பட்டுவிடக்கூடாது என்று வான்வழி பயணத்தை திட்டமிட்ட போதும் ஐஐடி மாணவர்கள் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Recommended Video

சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கண்ணில் கறுப்புக்கொடிகள் பட்டுவிடக்கூடாது என்று எத்தனையோ சிரத்தையாக போக்குவரத்து மாற்றம், வான்வழி போக்குவரத்து திட்டமிடப்பட்டாலும், ஐஐடி வளாகத்தில் பிரதமருக்கு நேராக ஐஐடி மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தில் நடைபெறும் ராணுவ கண்காட்சி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகை தந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை நகர் முழுவதும் கறுப்பு நிறம் நிரம்பி வழிகிறது. பிரதமர் செல்லும் பாதைகளில் இந்த கறுப்பு அவர் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க சிறப்பான ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது.

இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் இருந்து அடையாறு புற்றுநோய் மையத்திற்கு காரில் சென்ற பிரதமருக்கு ஐஐடி மாணவர்கள் கறுப்புகொடி காட்டினர். பிரதமர் மோடிக்கு எதிராக எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமரின் கார் ஐஐடி வளாகத்தில் இருந்து அடையாறு புற்றுநோய் மையத்திற்கு சென்ற போது ஐஐடி மாணவர்கள் பிரதமருக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications