மீண்டும் கனமழை- வெள்ளத்தில் மிதக்கும் சென்னை புறநகர்கள்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகள் மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன. விடாமல் வெளுத்து வரும் அடை மழையால் சென்னை புறநகர்களில் உள்ள பல்வேறு பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயுள்ளது. பல இடங்களில் மின்சாரம் ரத்தாகியுள்ளது.
இரண்டு பெரிய மழையைப் பார்த்து விட்ட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் இன்னும் அதன் கஷ்டத்திலிருந்தே மீ்ண்டு வராத நிலையில் அடுத்த பெரிய மழை வந்து விட்டது.
முதல் மழையைப் போல இது விடாமல் பெய்து வருவதால் சென்னை நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. அதேபோல புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளது.
|
சாலைகள், தெருக்களில் வெள்ளம்
சாலைகள் தெருக்களில் வெள்ளம் போல நீர் ஓடுகிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மீண்டும் வெள்ளம் புகத் தொடங்கியுள்ளது.

ஜிஎஸ்டி சாலை கடல் போலானது
தாம்பரம் டூ கிண்டி வரையிலான ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சாலையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் ழூழ்கியுள்ளன. கடல் போல தண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

வாகனங்கள் ஸ்தம்பிப்பு
பஸ் போன்ற வாகனங்களையே ஓட்ட முடியாத நிலை. கார் போன்றவற்றை சுத்தமாக ஓட்ட முடியாமல் போனதால் வாகனதாரிகள் பெரும் ஸ்தம்பிக்குள்ளாகியுள்ளனர்.
|
பட்டப் பகலிலும் இருட்டு
ஊரே இரண்டு போய்க் காணப்படுகிறது. நள்ளிரவுக்கு மேல் பெய்யத் தொடங்கிய அடை மழை விடாமல் பெய்து வருவதால் மக்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர். ஆனாலும் முன்பு பெய்த மழையால் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அவர்கள் இரவோடு இரவாக ஆயத்த நிலைக்குப் போய் விட்டனர்.
|
மின்சாரம் இல்லை
பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்திருப்பதாலும், முழங்கால் வரை தெருக்களில் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Accenture offices in OMR and perungalathur @ChennaiRains @Priyamvathap @ChennaiConnect pic.twitter.com/FIZUnoFYyr
— Sailesh Davey (@sailudavey) December 1, 2015 -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications