கன்னியாகுமரி டூ சென்னைக்கு சுற்றுலா கப்பல் போக்குவரத்து... ராமேஸ்வரம், வேளாங்கண்ணியை இணைத்து!
நாகர்கோவில்: கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு சுற்றுலாக் கப்பல் போக்குவரத்துத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தில் ராமேஸ்வரம், வேளாங்கண்ணி ஆகியவை இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரிக்கு வந்திருந்த அமைச்சர் மகேஷ் சர்மா அங்கு பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளை பார்வையிட்டார். அவருடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளி்ட்டோரும் வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியின் மேம்பாடு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. இதுகுறித்து ஆராயப்படும்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை. அது நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.
கடற்கரை சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தமிழகத்திலும் அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக ரூ. 170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுற்றுலா கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதுதொடர்பான செயல் திட்ட ஆய்வு முடிந்துள்ளது. விரைவில் இது அமல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் ராமேஸ்வரம், வேளாங்கண்ணி ஆகியவையும் இணைக்கப்படும்.
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சிறப்பு கேஸாக எடுத்துக் கொண்டு பரிசீலிக்கப்படும். தற்போது மிகச் சமீபமாக ஒரு விமான நிலையம் உள்ளதால் சட்டப்படியும், கொள்கைப்படியும் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைப்பது கடினம்தான். இருப்பினும் சிறப்பு விவகாரமாக இது கருதப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications