சென்னை முகப்பேரில் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
சென்னை: சென்னை முகப்பேரில் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் முத்தமிழ். இவரது மனைவி ஜெயந்தி. அண்ணாநகர் எல்.ஐ.சி கிளையில் ஜெயந்தி உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் முத்தமிழ். ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இந்த தம்பதிகளின் ஒரே மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். ஜெயந்தி கடுமையான பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் தவித்துள்ளார். எனவே வேலையை விட்டு நின்று விடுகிறேன் என்று அடிக்கடி கூறி இருக்கிறார். ஆனாலும் சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
ஜெயந்தி குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்பில் 2 ஆவது மாடியில் குடியிருக்கிறார்கள். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் படுக்கையறையை விட்டு வெளியே வந்த ஜெயந்தி 2 ஆவது மாடியில் இருந்து குதித்தார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவனை செல்லும் வழியிலேயே ஜெயந்தி பரிதாபமாக இறந்தார்.இது பற்றி நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications