ஓகி புயலால் தமிழகத்தில் அதிக மழை ... டிச.4ல் சென்னையில் மழை
ஓகி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. குமரி, நெல்லை மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
Recommended Video

திருநெல்வேலி: ஓகி புயலால் தென் தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஓகி புயலின் சீற்றத்தினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆறுகள், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஐந்து சதவிகிதம் அதிகமாகப் பெய்துள்ளது என்றும், இதுவரை தமிழகத்தில் 38 சதவிகித மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆறுகளில் வெள்ளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போதெல்லாம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும், இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆறுகளில் வெள்ளம்
தாமிரபரணி மட்டுமின்றி மற்ற இம்மாவட்டத்தில் உள்ள பச்சையாறு, கடனா நதி, கருப்பா நதி போன்ற ஆறுகளிலும் கருப்பா நதியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கடையநல்லூர் பகுதியை சூழ்ந்துள்ளது.

நனைந்த தமிழகம்
ஓகி புயலுக்கு தென் தமிழகம் மட்டுமல்ல 21 மாவட்டங்கள் நனைந்துள்ளன. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

இந்திய வானிலை மையம்
அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 4 மற்றும் 5-ம் தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்
அந்தமான் கடல்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறி அது மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.

5சதவிகிதம் கூடுதல் மழை
வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை, நவம்பர்1ஆம் தேதி முதல் டிசம்பர்2ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சராசரி அளவைவிட ஐந்து சதவிகித மழை அதிகமாகப் பெய்துள்ளது என்றும், இதுவரை தமிழகத்தில் 38 சதவிகித மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications