இறந்தும் துடிக்கும் இதயம் – மூளைச்சாவு அடைந்த மெஷின் ஆபரேட்டர் உறுப்புகள் தானம்!
சென்னை: சென்னையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மெஷின் ஆபரேட்டர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணிச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். ஆட்டோ டிரைவர்.
இவருடைய கடைசி மகன் பாலாஜி. இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு லேத் பட்டறையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

தவறி விழுந்த பாலாஜி:
கடந்த 21 ஆம் தேதியன்று பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது பாலாஜி தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.
அப்போலோவில் சிகிச்சை:
அவர் சிகிச்சைக்காக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பகல் 1.30 மணியளவில் பாலாஜி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உறுப்புகள் தானம்:
இதனையடுத்து பாலாஜியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய பெற்றோர்கள் முன்வந்தனர். இதையடுத்து இதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை மருத்துவர்கள் வெளியே எடுத்தார்கள்.
இறந்தும் துடிக்கும் இதயம்:
பாலாஜியின் உடல் உறுப்புகளில் இதயம் நேற்று மாலை 6.29 மணியளவில் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தம்:
இதற்காக அப்போலோ மருத்துவமனையிலிருந்து முகப்பேர் வரை போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சரியாக 6.40 மணிக்கு முகப்பேர் தனியார் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு சேர்க்கப்பட்டது.
இறந்து உயிர்வாழும் மகன்:
மற்ற உறுப்புகளும் உறுப்பு தேவையுடன் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதற்காக மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பபட்டன. இறந்து தங்கள் மகன் உயிர்வாழ்கின்றான் என்று பாலாஜியின் பெற்றோர் மனதை உருக்கும் வகையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications