உயிர்தப்பினார்.. சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் பரபரப்பு!
எம்பி சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: எம்பி சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
ஜெயலலிதா தன்னை அடித்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பியவரும் இந்த சசிகலா புஷ்பாதான். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் தனியார் விமானத்தில் பயணித்தார்.

80 பயணிகளுடன்
விமானத்தில் சசிகலா புஷ்பா உட்பட 76 பயணிகள் மற்றும் 4 விமான பணிக்குழு பணியாளர்கள் உள்ளிட்ட 80 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்படத்தொடங்கி ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது.

கண்டுபிடித்த விமானி
அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த விமானி இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

கோளாறு சரிபார்ப்பு
இதைத்தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின்படி இழுவை வண்டி மூலம் விமானம் இழுக்கப்பட்டு புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொறியாளர் குழுவினர் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று மணிநேரம் தாமதம்
பயணிகள் அனைவரும் ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து, சுமார் மூன்று மணிநேரம் தாமதமாக விமானம் மீண்டும் புறப்பட்டது.

உயிர்தப்பிய சசிகலாபுஷ்பா
விமானியின் துரித செயல்பாட்டினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சசிகலா புஷ்பா உட்பட 80 பேரும் எந்த பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications