காதலன் தற்கொலை... சீரியல் நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு!
சீரியல் நடிகை நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சீரியல் நடிகை நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது காதலனான உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை காலை உயிரிழந்தார்.

பரபரப்பு
இதைத்தொடர்ந்து நிலானியும் காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கோரிக்கை
இதனால் அதிர்ச்சியடைந்த நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். காந்தி லலித் குமாரின் தற்கொலைக்கு தான் காரணமில்லை என்ற அவர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நிலானி தற்கொலை முயற்சி
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி நிலானி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலீஸ் வழக்குப்பதிவு
மருத்துவமனையில் நிலானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை நிலானி மீது சென்னை மதுரவாயல் போலீசார் தற்கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications