15 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கு – வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை!
சென்னை: சென்னையில் சிறுமி ஒருவரைக் கற்பழித்து கொலை செய்த வாலிபர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சம்பத்குமார். வாடகை கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி.
இவர், அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை ஆட்டோவில் சம்பத்குமார் கடத்திச்சென்றார்.
பின்னர் அச்சிறுமியை கிருஷ்ணகிரிக்கு அழைத்துச்சென்று, அங்கு திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை சம்பத்குமார் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன்பின்னர், அதே ஆண்டு ஆகஸ்டு 19 ஆம் தேதி மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து வடபழனி அருகே அச்சிறுமியை இறக்கிவிட்ட சம்பத்குமார், அதன்பின்னர் தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீசார் பலாத்கார சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மீனா சதீஷ், "பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், சம்பத்குமாருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்" என்று நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications