12 மாவட்டங்கள்.. கூலான செய்தி சொன்ன சென்னை வானிலை மையம்! இன்று முதல் மே 31 வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மே 31 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை 28 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 29 முதல் மே 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் 12, பொது பணித்துறை பயணியர் விடுதி (சிவகங்கை), கொடநாடு (நீலகிரி) தலா 8, தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), பெருந்துறை (ஈரோடு), பாலவிதிதி (கரூர்) தலா 6, கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), திருமயம் (புதுக்கோட்டை), புதுச்சத்திரம் (நாமக்கல்), சேந்தமங்கலம் (நாமக்கல்), பாண்டவையார் தலைமை (திருவாரூர்), கோத்தகிரி (நீலகிரி), மீமிசல் (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 5, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), ஹரூர் (தர்மபுரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), கடவூர் (கரூர்), காரைக்குடி (சிவகங்கை), ராசிபுரம் (நாமக்கல்), அதிராம்பட்டினம் AWS (தஞ்சாவூர்), காரையூர் (புதுக்கோட்டை) தலா 4, தஞ்சாவூர், மணப்பாறை (திருச்சி), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), கீரனூர் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), சேலம், மணமேல்குடி (புதுக்கோட்டை), கொடுமுடி (ஈரோடு), வத்தலை அணைகட்டு (திருச்சி), முசிறி (திருச்சி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), குளித்தலை (கரூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), தம்மம்பட்டி (சேலம்), எருமப்பட்டி (நாமக்கல்) தலா 3, வெட்டிகாடு (தஞ்சாவூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), கோவில்பட்டி (திருச்சி), அவினாசி (திருப்பூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), செந்துறை (அரியலூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), பஞ்சப்பட்டி (கரூர்), கரியக்கோவில் அணை (சேலம்), அம்மாபேட்டை (ஈரோடு), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), வல்லம் (தஞ்சாவூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), குடவாசல் (திருவாரூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), மலையூர் (புதுக்கோட்டை), பூதலூர் (தஞ்சாவூர்), வம்பன் AWS (புதுக்கோட்டை), நாமக்கல், ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), மன்னார்குடி (திருவாரூர்), கவுந்தப்பாடி (ஈரோடு) தலா 2, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, மாயனூர் (கரூர்), புதுக்கோட்டை, கங்கவள்ளி (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), தர்மபுரி PTO, காட்டு மன்னார் கோயில் (கடலூர்), உடையாளிபட்டி (புதுக்கோட்டை), மைலம்பட்டி (கரூர்), சந்தியூர்_KVK AWS (சேலம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), ஆத்தூர் (சேலம்), திருச்சிராப்பள்ளி டவுன், துவாக்குடி (திருச்சி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வி.களத்தூர் (பெரம்பலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), குன்னூர் (நீலகிரி), லால்பேட்டை (கடலூர்), திருச்சிராப்பள்ளி விமான நிலையம், பொன்மலை (திருச்சி), குன்னூர் PTO (நீலகிரி), நன்னிலம் (திருவாரூர்), தர்மபுரி, லக்கூர் (கடலூர்), குப்பணம்பட்டி (மதுரை), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), பொன்னணியார் அணைக்கட்டு (திருச்சி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), செஞ்சி (விழுப்புரம்), பெலந்துறை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), தோகமலை (கரூர்), சோலையார் (கோயம்புத்தூர்), திருவையாறு (தஞ்சாவூர்), தேவகோட்டை (சிவகங்கை), திருப்பத்தூர் PTO தலா 1.

இன்றும் நாளையும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள- தென் கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications