கரையைக் கடந்தது வர்தா புயல்.. மீண்டும் சேவையைத் தொடங்கியது மெட்ரோ ரயில்
புயல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
சென்னை: வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து சென்னையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை மீண்டும் மாலை முதல் தொடங்கியது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே மதியம் 3.30 மணிக்கு கரையைக் கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புயல் கரையைக் கடந்த போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். புயல் கரையைக் கடந்தபோதும் இன்னும் பல இடங்களில் மின்சாரம் சரிசெய்யப்பட வில்லை. இதனிடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று மாலை முதல் மீண்டும் தொடங்கியது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications