48 மணி நேரத்திற்குள் கடலோர மாவட்டங்களில் கன மழை – வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடற்கரை பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதியும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமானுக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த நிலையும் ஒன்றாக இணைந்துள்ளது.
இதனால் காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து புயல் சின்னமாக மாற உள்ளதால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன், "இலங்கையையொட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
வரும் 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் மழை துவங்கி படிப்படியாக அதிகரிக்கும். உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் ஓரளவு மழை பெய்யும்.
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications