சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்.. 5 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து,. கோயம்பேடு அருகே நிலை தடுமாறி தடுப்புச் சுவர் மீது மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது.

திருச்சியில் இருந்து, சென்னை நோக்கி நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது.

பேருந்து சென்னைக்குள் நுழைந்து, கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலம் மீது ஏறி வந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்து நிலை தடுமாறி இடதுபக்கம் இருந்த தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது.

அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததால், உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறினர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தினுள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாலையின் நடுவே பேருந்து கவிழ்ந்ததால், எப்போதும் பிஸியாக இருக்கும் ஈக்காட்டுத்தாங்கல் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மணி நேரங்களுக்குப் பிறகே கவிழ்ந்து கிடந்த பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+