'குட் ஜாப், கீப் இட் அப்': சென்னை பாஸ்போர்ட் ஆபீஸை பாராட்டிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
சென்னை: 2014-2015ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றியதற்காக சென்னையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தை பாராட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சான்றிதழ் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தின் கிளைகள் போன்று சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2014-2015ம் ஆண்டில் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இது குறித்து பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி பாலமுருகன் கூறுகையில்,
சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் நடப்பாண்டில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 892 விண்ணப்பங்களை ஏற்று செயல்பட்டுள்ளன.
2014-2015ம் ஆண்டில் தமிழகத்தில் 9.49 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தினமும் 9 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இருந்து 2 ஆயிரத்து 550 விண்ணப்பங்கள் வருகின்றது. காரைக்கால், விழுப்புரம், புதுவை மக்களுக்காக புதுவையில் வரும் செப்டம்பர் மாதம் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம் துவங்கப்பட உள்ளது.
ஹஜ் யாத்ரீகர்களுக்காக கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 600 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் அடிக்கடி மெயின் அலுவலகத்திற்கு அலையாமல் இருக்க ராயலா டவர்ஸில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் சிறப்பு செல் துவங்கப்பட்டுள்ளது. அங்கு போன் செய்து தங்களின் விண்ணப்பம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு மட்டும் 150 பேர் போலி ஆவணங்கள் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications