ஆவடி ராணுவ மைதானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி.. வாக்கிங் சென்றவர்களுக்கு ஜாக்பாட்
ஆவடி பகுதியில் ராணுவ மைதானத்திற்குள் கிடந்த சுமார் ரூ.1 கோடி பணத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் சுமார் 1 கோடி ரூபாய் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று, காலை குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தனர். தங்களால் முடிந்த பணத்தை அள்ளிக்கொண்டு 'அப்பீட்' ஆகினர். தகவல் பரவியதும் அருகேயுள்ள, வெங்கடேசபுரம், அம்பேத்கர் நகர், உழைப்பாளர் நகர், கரிமேடு, முத்தாபுதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பணத்தை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அதுகுறித்த தகவல் இதுவரை காவல்துறைக்கு அளிக்கப்படவில்லையாம். அந்த பகுதியைச்சேர்ந்த ராணுவத்தில் உள்ள உயரதிகாரிகள்தான் தங்கள் பணத்தை கொட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் வேறு இடத்திலிருந்து அப்பகுதிக்குள் வந்து பணத்தை கொட்டுவது சாதாரணமான விஷயமில்லை என தெரிகிறது.
மைதானத்தில் கொட்டப்பட்டிந்த பணத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications