தீபாவின் கார் ஓட்டுநராக இருந்த ராஜா திடீர் கைது- காவல்நிலையத்தில் தீபா தர்ணா!
தீபாவின் கார் ஓட்டுநர் ராஜா திடீரென கைது செய்யப்பட்டார்.
சென்னை: எம்ஜிஆர் அம்மா பேரவையின் பொதுச்செயலாளர் தீபாவின் கார் ஓட்டுநராக இருந்த ராஜா நேற்று திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்தில் போலீசாருடன் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஓட்டுநராக இருந்த ராஜாவை தமது நீண்டகால நண்பர் என கூறிவந்தார் தீபா. அவருக்கும் எம்ஜிஆர் அம்மா பேரவையில் பொறுப்பு வழங்கினார் தீபா.

இதனால் தீபாவுக்கும் கணவர் மாதவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாதவன் தனிக்கட்சி தொடங்கினார். பொதுமக்கள் முன்னிலையில் மாதவனை ஒருமையில் ராஜா விமர்சித்த போதும் தீபா வேடிக்கை பார்த்தார். பின்னர் தீபாவுடன் இணைந்துவிட்டதாக மாதவன் அறிவித்தார்.
திடீரென ராஜாவை எம்ஜிஆர் அம்மா பேரவையில் இருந்து நீக்குவதாக தீபா சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இந்நிலையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக ராஜாவை சென்னை தி.நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இத்தகவலை கேள்விப்பட்ட தீபா, காவல் நிலையத்துக்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications