வெங்கடேச பண்ணையாரின் 'வலதுகரம்..' 'தாத்தா' செந்தில் சென்னையில் கைது!
சென்னை: வெங்கடேச பண்ணையாருக்கு நெருக்கமான பிரபல ரவுடி தாத்தா செந்தில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் தாலுகா, ஒசரவிளை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தில்குமார் என்கிற ‘தாத்தா' செந்தில் (55). வயதான தோற்றத்தில் இருப்பதால் அவருக்கு தாத்தா செந்தில் என்ற பெயர் வந்ததாம்.

பிரபல ரவுடியான இவர், 2011-ம் ஆண்டு நடந்த வனத்துறை அலுவலர் ஆறுமுகம் மற்றும் அவர் மனைவி யோகேஷ்வரி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட, இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகும். இவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் காரில் வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு செந்தில் சுற்றி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸார், தலைமறைவாக இருந்த ‘தாத்தா' செந்திலை கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், பட்டா கத்தி போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
செந்தில் மீது 9 கொலை வழக்குகள் பதிவாகின. அதில் பல வழக்குகளில் சாட்சியங்கள் இல்லாமல் விடுதலையானவர் செந்தில். 2 வழக்குகள் நிலுவையிலுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேச பண்ணையாரின் வலது கரம் போல செயல்பட்டவர் செந்தில்.
பண்ணையாரின் தந்தை மற்றும் தாத்தாவை கொலை செய்த பகீரதன் என்பவரை போட்டுத்தள்ளியதும் செந்தில்தான் என்கிறது போலீஸ். 1994ம் ஆண்டு சாமுவேல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், 1995ல் பசுபதி பாண்டியனின் உறவுக்காரர் ராஜகோபால், 2006ல் பசுபதி பாண்டியன் மனைவி ஜெசிந்தா கொலை வழக்குகளிலும் செந்திலுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
எதிரிகளை உடல் அளவில் டார்ச்சர் செய்து, தங்கள் பக்கம் வரவிடாமல் செய்வதில் செந்திலை நிபுணர் என்கிறார்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்துகளில் தாத்தா செந்தில் ஈடுபட்டுவந்ததாக அம்பத்தூர் போலீசார் தெரிவிக்கின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications