ஆர்கே நகரில் 5 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்... சென்னை கமிஷனர் விஷ்வநாதன் பேட்டி!
ஆர்கே நகரில் 5 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை : புகார்களின் அடிப்படையில் தேர்தல் அதிகாரியுடனான ஆலோசனைக்குப் பிறகு 5 காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் கண்காணிப்புப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது கார்த்திகேயன் கூறியதாவது : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் அடங்கிய வாக்குச் சீட்டுகளை பொருத்தும் பணி இன்று மாலையில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்படும். வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இந்தப் பணிகள் வெளிப்படையாக நடக்கிறதா என்பதை பார்வையிடலாம். இந்தப் பணிகள் தொடங்கியுள்ளது மாலைக்குள் முடிந்துவிடும்.

வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம், அவர்களின் பெயர்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும், வேட்பாளரின் புகைப்படமும் அதில் இடம்பெறும். பெல் நிறுவன பொறியாளர்களும் இந்தப் பணிகளைப் பார்வையிடுகின்றனர். நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில் 107 குழுக்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முதன்முறையாக ஆர்கே நகரில் 15 சிஆர்பிஎஃப் கம்பெனிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் தேர்தல் நல்ல முறையில் நடைபெற முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்.
85 இடங்களில் சுமார் 252க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காட்சிகளை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகின்றனர். வீடுவீடாக சென்று பணப்பட்டுவாடா செய்வதோ, பொருட்கள் விநியோகம் செய்வதோ இதுவரை பதிவாகவில்லை என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், இடைத்தேர்தல் தொடர்பாக 84 வழக்குள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 6 கம்பெனி சிஆர்பிஎஃப் போலீசார் இன்று சென்னை வர உள்ளனர். எந்தப் புகார் வந்தாலும் 5 நிமிடத்தில் அந்த இடத்திற்கு போலீசார் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளரை மாற்றுவது குறித்து தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியன் பேரில் ஒரு காவல் ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். ஆர்கே நகர், காசிமேடு காவல் சரகத்திற்குற்குட்பட்ட எல்லைகளில் பணியாற்றி வந்த 5 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications