24 மணி நேரமும் தீயா வேலை செய்யணும்... சென்னை இன்ஸ்பெக்டர்களுக்கு கமிஷனர் உத்தரவு
சென்னை: சென்னை நகரில் சட்டசபைத் தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் இன்ஸ்பெக்டர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பல்வேறு உத்தரவுகளை இன்ஸ்பெக்டர்களுக்குப் பிறப்பித்துள்ளார். அவை குறித்த விவரம் வருமாறு:

போலீஸ் நிலையங்களில் 24 மணி நேரமும் இன்ஸ்பெக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.
12 மணி நேரம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டரும், அடுத்த 12 மணி நேரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரும் போலீஸ் நிலையங்களில் பணியில் இருக்க வேண்டும்.
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் ஏற்கனவே கமிஷனருடன் ஆலோசனை நடத்தி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications