வெள்ள மீட்பு... நாங்க செய்தது என்ன?.. 3 நிமிட வீடியோவை வெளியிடும் சென்னை போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளின்போது சென்னை காவல்துறையின் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில் ஒரு 3 நிமிட வீடியோவை சென்னை காவல்துறை தயாரித்துள்ளதாம். இதை விரைவில் வாட்ஸ் ஆப்பில் வெளியிடவுள்ளனராம்.
சென்னை பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து பல்வே்று தரப்பினரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் குதித்தனர். அரசுத் தரப்பில் காவல்துறை, தீ்யணைப்புத் துறை உள்ளிட்டவற்றுக்கு இணையாக பொதுமக்களும் தாங்களே மீட்பு நடவடிக்கைகளில் குதித்தனர்.
இந்த நிலையில் சென்னை காவல்துறை மீட்பு நடவடிக்கைகளின்போது தான் செயல்பட்ட விதம் குறித்து விளக்கும் வகையில் ஒரு வீடியோவைத் தயாரித்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
- சென்னை வெள்ள மீட்புப் பணிகளில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டது.
- 20,000 போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் மூலம் கிட்டத்தட்ட 20,000 பேர் வரை மீட்கப்பட்டனர்.
- ஆளில்லா விமானங்கள் மூலம் 200 பேர் மீட்கப்பட்டனர்
- வெள்ள மீட்புப் பணிகளை விவரிக்கும் வீடியோ ஒன்றை தயாரித்துள்ளோம்.
- 3 நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோ விரைவில் வாட்ஸ்ஆப்பில் வெளியிடப்படும்.
- போலீஸார் சரிவர செயல்படவில்லை என்று கூறுவோருக்குப் பதில் தரும் வகையில் இந்த வீடியோ அமையும் என்று போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications