லிமிட்டா குடிங்க... முத்தம் கூடாது.. நீச்சல் குளத்தை மூடுங்க - போலீசின் புத்தாண்டு நிபந்தனைகள்!
சென்னை: சென்னை மாநகரில் புத்தாண்டு தினத்தில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மட்டும் மது விருந்துக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
ஆண்டு தோறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்னையில் களைகட்டும். வரவிருக்கும் 2014 புத்தாண்டை வரவேற்று, கோலாகலமாக கொண்டாட சென்னைவாசிகள் இப்போதே தயாராகி வருகிறார்கள். வழக்கமான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவிருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகளுடன்
முதல் கட்டமாக நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஸ்தாஸ், இணை கமிஷனர் சண்முகவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சென்னையில் உள்ள சுமார் 70 நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிரடி கட்டுப்பாடுகள்
இந்த கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நட்சத்திர ஓட்டல்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் வருமாறு:
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், நடனம் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகளை நள்ளிரவு 12 மணி முதல், 1 மணி வரை நடத்தலாம். 24 மணி நேர கொண்டாட்டங்களுக்கு விசேஷ அனுமதி பெற்ற ஓட்டல்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு தரப்படும்.

ஆபாச நடனத்துக்கு தடை
நடன நிகழ்ச்சி அரங்கம் நிரந்தர கட்டிடத்தில் இருக்க வேண்டும். தற்காலிக மேடைக்கு அனுமதி இல்லை. நடன நிகழ்ச்சி அரங்கத்திற்கு அருகில் மது அருந்தும் பார் இருக்கக் கூடாது. மது அருந்தும் பார் தனியாக இருக்க வேண்டும்.

முத்தம் கொடுக்கக் கூடாது
நடன நிகழ்ச்சிகளில் எல்லை மீறல் இருக்கக் கூடாது. முத்தம் கொடுத்தல் மற்றும் அரைகுறை ஆடை அணிந்த குத்தாட்டம் போன்ற ஆபாச நடனத்தை அனுமதிக்கக்கூடாது. நடன நிகழ்ச்சி இசை நிகழ்ச்சியில், அதிக சத்தம் எழுப்ப அனுமதிக்க கூடாது.

லிமிட்டா குடிங்க
மது விருந்தில் அதிகமாக மது அருந்த அனுமதிக்கக் கூடாது. போதையில் இருப்பவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது. ஓட்டல் நிர்வாகத்தினர் போதையில் இருப்பவர்களை காரில் அழைத்துச் சென்று வீட்டில் பாதுகாப்பாக விட வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

நீச்சல் குளத்தை மூடுங்க
புத்தாண்டு விழா நடக்கும் நட்சத்திர ஓட்டல்களில், 31-ந் தேதி மாலை 6 மணி முதல் நீச்சல் குளத்தை மூடிவிடவேண்டும். மறுநாள்தான் நீச்சல் குளத்தை திறக்க வேண்டும்.

வெளிநாட்டவர்
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெளி நாட்டவர் பற்றிய விவரங்களை முன் கூட்டியே போலீசில் தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டவரின் விசா பற்றிய நகல்களையும் போலீசில் ஒப்படைக்க வேண்டும்.

போலீசார் பாத்துட்டே இருப்பாங்க
மது விருந்து, நடன நிகழ்ச்சி அரங்கங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்க வேண்டும். நிகழ்ச்சி காட்சிகளை, கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். நட்சத்திர ஓட்டல்களில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை போலீசார் முன் கூட்டியே பார்வையிட்டு, சோதனை நடத்திட ஓட்டல் நிர்வாகத்தினர் அனுமதிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும்போது, போலீசார் வெளியில் பாதுகாப்புக்கு இருப்பார்கள்.
-இவ்வாறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஏத்துக்கறோம் சார்..
போலீசாரின் இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் நிருபர்களிடம் தெரிவித்தனர். 24 மணி நேரம் ஆட்டம், மதுவிருந்து நடக்கும் ஹோட்டல் விபரங்களை விரைவில் அறிவிக்கப் போகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications