89 சிலைகள் பறிமுதல்.. 100 கோடி மதிப்பு.. மின்சார கனவு படத்தில் நடித்த அதே நபரா இந்த ரன்வீர் ஷா?
சிலை கடத்தல் வழக்கில் சிக்கி இருக்கும் தொழிலதிபர் ரன்வீர் ஷா ''மின்சார கனவு'' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் சிக்கி இருக்கும் தொழிலதிபர் ரன்வீர் ஷா ''மின்சார கனவு'' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ரன்வீர்ஷா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்து இருக்கிறது. ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் இந்த சோதனை நடந்தது.
இன்றும் இந்த சோதனை நடக்கிறது. இன்றும் நிறைய பொருட்கள் கைப்பற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

என்ன கிடைத்தது
நேற்று நடந்த சோதனையில் ரன்வீர்ஷா வீட்டில் நிறைய கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 55 சிலைகள் இங்கு இருந்தது. இதில் 12 வெண்கல சிலைகள், 22 கல் சிலைகள் இருந்தது. அதோடு 24 கோவில் தொடர்பான கலை பொருட்கள் இருந்தது. மொத்தம் 89 பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

எவ்வளவு மதிப்பு
இது கும்பகோணம் உள்ளிட்ட கோவில் சார்ந்த பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. 4 லாரிகளில் ஏற்றி செல்லும் அளவிற்கு பொருட்கள் அவரின் வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு 125 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் இது உத்தேச மதிப்புதான் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொழிலதிபராக இருக்கிறார்
மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார் ரன்வீர்ஷா. இவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று சென்னை கிண்டியில் உள்ளது. கடந்த 20 வருடமாக இவர்களின் குடும்பம் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் சிலை கடத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மின்சார கனவு
இவர் மின்சார கனவு படத்தில் நடித்துள்ளார். பிரபு தேவா, கஜோல், அரவிந்த்சாமி நடித்த அந்த படத்தில் இவர் சில காட்சிகளில் வருவார். கஜோலுக்கு பார்த்த பணக்கார வீட்டு பையனாக இவர் நடித்து இருப்பார். தற்போது இவர் வீட்டில்தான் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications