சென்னையில் ஒரே நாளில் 272 மிமீ மழை: 100 ஆண்டு கால சாதனை முறியடிப்பு
சென்னை: சென்னையில் டிசம்பர் மாதத்தில் சராசரியாக பெய்யும் மழையைவிட அதிக அளவு மழை நேற்று ஒரு நாளில் மட்டும் பெய்துள்ளது. இதன் மூலம் சென்னையில் மழை 100 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சென்னையில் மழை நேற்று புதிய சாதனை வேறு படைத்துள்ளது.

12 மணிநேரத்தில்
சென்னையில் டிசம்பர் 1ம் தேதி வெறும் 12 மணிநேரத்தில் 272 மிமீ மழை பெய்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் சென்னையில் சராசரியாக 191 மிமீ மழை பெய்யும்.

புதிய சாதனை
நேற்று மட்டும் சென்னையில் அதுவும் 12 மணிநேரத்தில் 272 மிமீ மழை பெய்துள்ளது. இதன் மூலம் 24 மணிநேரத்தில் அதிக மழை பெய்த 100 ஆண்டு கால சாதனையை தற்போதைய மழை முறியடித்துள்ளது.

1901ம் ஆண்டு
முன்னதாக 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 261.6 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் 1910ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் சென்னையில் டிசம்பரில் அதிக மழை பெய்துள்ளது.

மேலும் மழை
சென்னையில் மேலும் 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை விஷயத்தில் சென்னை மேலும் பல சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications