சென்னை வெள்ளம்: நடுவழியில் ரயில்கள் நிறுத்தம் - பல ரயில்கள் ரத்து
சென்னை: சென்னையில் பெய்துவரும் மழை மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக, ஏராளமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்களில் இருந்து நடுவழியிலேயே இறக்கிவிட்டதால் குழந்தைகளுடன் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை - பெங்களூரு பிருந்தாவன் ரயில் மற்றும் சென்னை - ஷீரடி சாய் நகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் வரலாறு காணத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னைக்கு வரும் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாற்றுப்பாதையில் ரயில்கள்
தொடர் மழை காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிச் செல்லும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு வருகின்றன.

நடுவழியில் நிறுத்தம்
பெங்களூரு-சென்னை வந்த பெங்களூருசிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது. நடுவழியிலேயே இறக்கிவிட்டதால் குழந்தைகளுடன் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

ரத்தான ரயில்கள்
சென்னை - பெங்களூரு பிருந்தாவன் ரயில் மற்றும் சென்னை - ஷீரடி சாய் நகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் சேவையில் மாற்றம்
சென்னையில் பெய்துவரும் மழை மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக, பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை - மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் வாலஜா சாலை வரையிலும், பழனி - சென்னை ரயில் ஆவடி வரையிலும், நெல்லை - சென்னை ரயில் காட்பாடி வரையிலும், மங்களூரு - சென்னை ரயில் சோழிங்கர் வரையிலும், சென்னை - பெங்களூரு ரயில் திருவள்ளூர் வரையிலும், கச்சிகுடா - சென்னை ரயில் திருத்தணி வரையிலும் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications