மீண்டும் "வரலாறு" படைத்த சென்னை மழை.. 24 மணி நேரத்தில் 117 மி.மீ கொட்டித் தீர்த்தது!
சென்னை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 117 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் இந்த மழை அளவு பதிவாகியுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் -டிசம்பரில் கொட்டித் தீர்த்த மழையின் பாதிப்பே மக்கள் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. இந்த நிலையில் இன்னொரு கன மழை சென்னையை உலுக்கி வருகிறது.

நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. கடந்த வெள்ளத்தைப் போன்ற பாதிப்பு வரவில்லை என்ற போதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 117 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் பெய்த அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
திங்கள்கிழமை மட்டும் இங்கு 71 மில்லிமீட்டர் மழைப் பொழிவு இருந்தது. அதிலும் 12 மணி நேரத்தில் மட்டும் 66 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு வட மேற்கில் நிலை கொண்டுள்ளது. இதனால் மழை அளவு மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் 2 நாட்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை மேலும் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது.
மழை தொடர்ந்து, சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பும்பட்சத்தில் வெள்ளப் பெருக்குக்கு வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் மனதை விட்டு இன்னும் வெள்ள அச்சம் விலகாமலேயே உள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications