வெள்ள பாதிப்பு மறுவாழ்வு பணிகளுக்காக... தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி அளித்த அன்புமணி
சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிகள் கிடைத்து வருகின்றன.

அந்தவகையில் பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்ற செயலக அறிவிப்பின் படி, தனது தொகுதி நிதியில் இருந்து ரூ. 1 கோடி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''வரலாறு காணாத மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தன. ஆனால், இதை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்றும், அதனால் இதை ‘‘கடுமையான பாதிப்புகள்'' என அறிவிப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கலாம் என்று நாடாளுமன்ற செயலகம் அறிவித்திருக்கிறது. இந்த நல்லெண்ண நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கும் நாடாளுமன்ற செயலகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற பாதிப்புகள் இனியும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்தாய்வு நடத்தி தீர்மானிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications