சென்னையில் நீரவ்மோடி பாணி வங்கி மோசடி... ரூ. 824 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட 'கனிஷ்க்'
14 வங்கிகளை மோசடி செய்து சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம் கனிஷ்க் ரூ. 824 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
Recommended Video

சென்னை : 14 வங்கிகளை மோசடி செய்து சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம் கனிஷ்க் ரூ. 824 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடிதம் எழுதியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் வெளிநாட்டு வங்கிகளை மோசடி செய்து ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செய்தார் தொழிலதிபர் நீரவ் மோடி என்று பிஎன்பி வங்கி கூறியது. இந்த விஷயத்திலேயே இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சென்னையில் நீரவ்மோடி பாணியில் ஒரு மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

சென்னை வடக்கு உஸ்மான் சாயில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் செயல்பட்டு வரும் தங்க நகை தயாரிப்பு நிறுவனமான கனிஷ்க் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிண்டிகேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆந்திர வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்றுள்ளார்.
இந்த மோசடி தெரியவந்ததையடுத்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிபிஐ இணை இயக்குனருக்கு 16 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது. தங்க நகை இருப்பை அதிகமாக காட்டி வங்கிகளிடம் பூபேஷ் குமார் ஜெயின் மோசடியாக கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications