சென்னை சில்க்ஸ்சில் இருந்து குபு குபுவென கரும் புகை.. அச்சத்தால் வெளியேறும் தி.நகர் வாசிகள்
இரண்டு நாட்களாக பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து வெளி வரும் கரும் புகையால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் வெளியேறி வருகின்றனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இரண்டாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.
ஆனாலும் தீ அணைந்தபாடில்லை. கடையின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. கடையின் சுவர்களுக்கு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உள்அலங்காரங்கள் என அனைத்தும் உருகின.

கரும்புகை
கட்டடத்தில் இருந்து இரண்டு நாட்களாய் கரும் புகை வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்துள்ளது.

சரிந்து விழுந்த கட்டடம்
புகையை உறிஞ்சும் கருவியை பயன்படுத்தியும் எந்தப் பயனும் இல்லை. கட்டடத்தில் ஏற்பட்ட தீயால் 7வது மாடியிலிருந்து 2வது மாடி வரை இடிந்து விழுந்தன.

எச்சரிக்கை
இதனால் தி. நகர் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. குபு குபுவென வெளியேறும் புகையில் மூச்சு திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுத்தினர்.

வெளியேறும் அப்பார்ட்மெண்ட் வாசிகள்
இதனால் அச்சமுற்ற சென்னை சில்க்ஸ் அருகில் வசிக்கும் அப்பார்மெண்ட் வாசிகள் தியாகராயர் பகுதியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். கரும் புகை பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள உறவினர் வீடுகளில் அவர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications