சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்!
தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை: தீ விபத்தில் எரிந்து நாசமான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஜா கட்டர் எனும் எந்திரத்தை பயன்படுத்தி கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குகளை கொண்ட அந்தக் கட்டடம் எலும்புக்கூடானது. கட்டடத்தின் பெரும்பாலன பகுதிகள் உறுதித் தன்மையை இழந்து இடிந்து விழுந்தது.
இதையடுத்து அந்தக் கட்டடத்தை இடிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முற்றிலும் உறுதியிழந்து நின்ற அந்தக்கட்டடத்தை இனியும் விட்டு வைப்பது ஆபத்து எனக்கூறப்பட்டதால் அதனை இடிக்க முடிவு செய்தனர்.

இடிக்கும் பணி தொடக்கம்
இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இரண்டு ராட்சத எந்திரங்கள் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஜா கட்டர் எந்திரம்
ஜா கட்டர் எந்திரத்தை பயன்படுத்தி 7 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த கட்டட இடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

3 நாட்களுக்குள்
7 அடுக்குகளை கொண்ட இந்த பிரமாண்ட கட்டடம் மேல் இருந்து கீழாக இடிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்குள் இந்தக் கட்டடம் இடித்து தரை மட்டமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகில் வரவேண்டாம்
கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெறுவதால் யாரும் அருகில் வரவேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. கட்டடத்தை முழுவதுமாக இடித்து அகற்றும் வரை பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications