10 மணி நேரமாக பற்றி எரியும் தீ.. சென்னை சில்க்ஸின் முதல் தள சுவர்கள் இடிக்கப்படுகின்றன!
சென்னை சில்க்ஸில் உள்ள தீயை அணைக்க முடியாததால் அதன் முதல் தளத்தில் உள்ள சுவர்களை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை: சென்னை திநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 10 மணி நேரமாகியும் தீயை அணைக்க முடியாததால் முதல் தளத்தில் உள்ள சுவர்களை இடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட இக்கடையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 10 மணிநேரமாக போராடி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன. இத்தனை நேரம் தீ எங்கு பிடித்துள்ளது என்று கண்டறிய முடியாததால் தீயை அணைக்க வீரர்கள் திணறினர்.

7 மாடியும் எரிகிறது
தற்போது முதல் தளத்தில் தீவிபத்து நடந்துள்ளது தெரியவந்தது. கடைக்குள் இருந்து வெடிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்கிறது. தீ மளமளவென பரவி 7 மாடிகளுக்கும் பரவியுள்ளதால் கடையே பற்றி எரிகிறது.

உருகும் பிளாஸ்டிக்
பால்ஸ் சீலிங், சுவரை சுற்றி பிளாஸ்டிக் பொருள்களால் அலங்காரம் உள்ளிட்டவற்றால் கரும்புகை வெளியேற உடைக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் வழியாக பிளாஸ்டிக் உருகி வெளியேறுகிறது.

கரும்புகை
புகையை உறிஞ்சும் கருவிகள் மூலம் கரும்புகையை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 7 மாடிகளுக்கும் தீ பரவியதால் பெரும் விபத்து நடைபெறும் அபாயம் உள்ளதால் கடையின் முதல் தளத்தை இடிக்க வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

யாரும் வராதீர்கள்
இதனால் தி.நகர் பகுதிக்குள் யாரும் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கட்டடத்தை சுற்றி 7 மீட்டர் அளவுக்கு இடைவெளி விட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இங்கு புறாக் கூண்டு போல் அடுத்தடுத்து கடைகள் உள்ளதால் தீயை அணைப்பது பெரும் சவாலாகவே உள்ளது. இந்த தீயணைப்பு மீட்பு விவகாரங்கள் இரவு வரை நீடிக்கலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications