அடுக்குமாடியின் மேல்நின்று சென்னை சில்க்ஸ் தீவிபத்தை பார்க்கவேண்டாம்... போலீசார் வேண்டுகோள்!
தி சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை மக்கள் அடுக்குமாடிகளின் மீது நின்று பார்க்க வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை: தி சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தை காண மக்கள் சாரை சாரையாக திரண்டு வருகின்றனர். அதேநேரத்தில் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மேல் நின்றும் குடியிருப்பு வாசிகள் தீ விபத்தை பார்த்து வருகின்றனர்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குமாடி கட்டடம் கரும்புகையை உமிழ்ந்த படி எலும்புக்கூடாய் நிற்கிறது. இந்த விபத்தில் கடையில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கடைக்குள் தீச்சுவாலைகள் காணப்படுவதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 1000க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர கொண்டு வரப்பட்டுள்ளது.

வஜ்ரா வாகனம் மூலம்
தீ விபத்தை நேரில் காண உஸ்மான் ரோடு பகுதியில் நேற்று மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். கடையின் அருகில் திரண்டவர்களை போலீசார் நேற்று வஜ்ரா வாகனம் மூலம் விரட்டியடித்தனர்.

வர வேண்டாம்..
கடையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சனை ஏற்படும் என்பதால் மக்கள் நேரில் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

அடுக்குமாடிகளின் மேல்
இந்நிலையில் கடையின் அருகே வர முடியவில்லை என்றால் என்ன என அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் மீது ஏறி நின்று தீ விபத்தை மக்கள் ரசித்து வருகின்றனர். இதனால் செய்வதறியாது போலீசார் திகைத்துள்ளனர்.

நேரில் சென்று அறிவுரை
இதையடுத்து மக்கள் கூடியிருக்கும் பகுதிக்கு நேரில் சென்று போலீசார் கீழே இறங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் கடை உள்ள பகுதிக்கு திரண்டுவரும் மக்கள் எலும்புக்கூடாய் போன சென்னை சில்க்ஸை போட்டோ எடுக்கவும் கடையின் முன்பு செல்பி எடுக்கவும், ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications