சென்னை பி.பி.ஓ. பெண்ணை குத்திக் கொன்றவர், 18 வயது பெண்ணை கொன்ற வழக்கில் கைதானவர்
சென்னை: சென்னை பெருங்குடியில் கால் சென்டரில் வேலை பார்த்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர் ஏற்கனவே ஒரு 18 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வேளச்சேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தின் பிபிஓவில் அதாவது கால் சென்டரில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் வெங்கடாஜலபதி(28). அவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காட்டைச் சேர்ந்த வைஷியா(25) என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். வைஷியா அவரது காதலை ஏற்கவில்லை.
வைஷியா கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்துள்ளார். இது வெங்கடாஜலபதிக்கு பிடிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் வைஷியா அதை கண்டுகொள்ளாமல் பிரவீனை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வெங்கடாஜலபதி கடந்த திங்கட்கிழமை இரவு வைஷியாவுக்கு போன் செய்து வேலை விஷயமாக பேச வேண்டி உள்ளது, அதனால் நீ பெருங்குடி ரயில் நிலையத்திற்கு வா என்று அழைத்துள்ளார். அங்கு சென்ற இடத்தில் அவர் வைஷியாவை 16 முறை கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் அந்த பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து வெங்கடாஜலபதி தன்னைத் தானே குத்திக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து வெங்கடாஜலபதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு போராடிய அவர் நேற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.
வெங்கடாஜலபதி முன்னதாக ஈரோட்டில் தனது காதலை ஏற்க மறுத்த 18 வயது இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications