காவிரி வாரியத்திற்காக திமுக சாலை மறியல்... சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெறும் சாலை மறியல் போராட்டங்களால் சென்னையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 3வது நாளாக ரயில் மறியல், சாலை மறியல், விமான நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் திமுக நடத்தி வரும் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவான மார்ச் 29க்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால் தமிழகமே போராட்டக் களமாகியுள்ளது. விவசாய சங்கங்கள், அதிமுக, திமுக, காங்கிரஸ் என பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுமே போராட்ட களத்தில் இறங்கியுள்ளன. திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் காவிரி வாரியம் அமைக்கக் கோரி 3வது நாளாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஓட்டேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட சேகர் பாபு, மடிப்பாக்கம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் மேயர் மா. சுப்ரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தியாகராய நகரில் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரங்கநாதன் சுரங்கப்பாதை, மதுராந்தகம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு போராட்டம் என்று திமுகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று சென்னை தேனாம்பேட்டையில் திமுகவின் கு.க.செல்வம் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நகரின் முக்கிய சாலைகளில் திமுகவினர் நடத்தி வரும் மறியல் போராட்டங்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் திடீரென மறியலில் இறங்கும் எதிர்க்கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தியும், கைது செய்தும் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications