இனி சென்னையிலிருந்து திருப்பதி போற நேரத்தில்! திருச்சிக்கே போய்விடலாமே! சும்மா சல்லுனு பறக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

விக்கிரவாண்டி: தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையான சென்னை- திருச்சி சாலை தற்போது 4 வழிச்சாலையாக உள்ள நிலையில் இனி 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.

தமிழகத்தின் மையம், அதாவது சென்ட்ர் ஹப் என திருச்சியை அழைக்கலாம். திருச்சியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்லலாம். திருச்சியிலிருந்து மதுரை, கோவை, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களை இணைக்கிறது.

chennai trichy national highway

திருச்சியில் இருந்தால் எந்த நகரமும் அதிக தூரத்தில் இல்லை என்பதால் இதை ஹப் என்கிறார்கள். அது போல் திருச்சி சென்றுவிட்டால் அங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் எளிதாக செல்லலாம்.

இதனால் நாளுக்கு நாள் சென்னை - திருச்சி 4 வழிச்சாலையில் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் சாதாரண நாட்களிலேயே இந்த சாலையில் கடும் நெரிசல் நிலவுகிறது. இது விபத்தை ஏற்படுத்துகிறது.

பலருக்கு காயங்களும் உறுப்பு இழப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த உயிரிழப்புகளையும் விபத்துகளையும் நெரிசலையும் தவிர்க்க 4 வழிச் சாலையை கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே எனப்படும் எட்டு வழிச் சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னை- திருச்சி இடையே 310 கி.மீ. தூர பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 8 வழிச்சாலை சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கும். அதற்கான சாலை வளைவுகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் என தீவிரமடைந்து வருகின்றன.

இந்த பணிகள் முடிந்தவுடன் 8 வழிச்சாலை திட்டம் தொடங்கப்படும். இது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை- சேலம் அதி விரைவு சாலைக்கு அடுத்ததாக சென்னை - திருச்சி 8 வழிச்சாலை செயல்பாட்டுக்கு வரும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை - திருச்சி 4 வழிச்சாலையில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6131 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 2,076 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சாலைகளில் போதுமான அளவில் சேவை சாலைகள் (சர்வீஸ் ரோடு) இல்லாததும் சாலைகளின் மோசமான வடிவமைப்பும்தான் என சொல்லப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழையும் போதே வாகனத்தில் சல்லென செல்ல நினைத்து வேகமெடுப்பதுதான் காரணம். சென்னை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையானது தமிழகத்தின் தென் மாவட்டங்கள், காவிரி பாசன மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வடக்கு தமிழகத்தின் சில மாவட்டங்கள் என தமிழகத்தின் 80 சதவீத பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கு இந்த சாலைதான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 4 வழிச்சாலை 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 24 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 35 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கும் திறன் கொண்டது. ஆனால் தற்போது 1.50 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. இது நெரிசலை ஏற்படுத்தி விபத்தையும் ஏற்படுத்துகிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+