நாளை முதல் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்- சென்னையில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை: சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான சிலைகள் நாளை கரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் 2400 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

மூன்று நாட்கள் கரைக்கலாம்:
இந்தச் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும், பொது மக்களும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வருகிற 20 ஆம் தேதி, 21ஆம் தேதி, 23 ஆம் தேதி ஆகிய 3 நாட்களில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் பெரும்பாலான சிலைகள் 20 ஆம் தேதியே கரைக்கப்படலாம் என தெரிகிறது.

போலீசார் பாதுகாப்பு:
இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

ராட்சத கிரேன்கள் வரவழைப்பு:
சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படுகின்றன. சிலையை கரைக்கும் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

மது அருந்தக் கூடாது:
இரவு நேரத்திலும் சிலை கரைப்பு பணிகள் நடப்பதால் மின் விளக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது, அனுமதிக்கப்பட்ட சாலையில் மட்டுமே விநாயகர் ஊர்வலம் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து மாற்றம்:
சிலை கரைக்கும் நாட்களில் சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சிலை கரைப்பு நாட்களின் போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications