வெள்ளத்தால் சென்னை வடபழனி- கோயம்பேடு 100 அடிசாலையில் போக்குவரத்து பாதிப்பு!
சென்னை: வடபழனி - கோயம்பேடு 100 அடி சாலையில் மழை வெள்ள நீர் தேங்கி இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த சாலை நேற்று இரவு மூடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இன்று காலை முதல் அந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.
வங்க கடலில் உருவான தாழ்வழுத்தம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்தது. தலைநகர் சென்னையில் விடாது பெய்த மழைக்கு நகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
சாலையில் மழைநீர் அதிகமாக தேங்கி நிற்ன்றதால் வடபழனி 100 அடி சாலை வழியாக செல்லக் கூடிய வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு விருகம்பாக்கம் வழியாக கோயம்பேடுக்கு திருப்பி விடப்பட்டன.
கோயம்பேட்டில் இருந்து வடபழனி வரும் சாலையில் எந்த பாதிப்பும் இல்லாததால் கோயம்பேட்டில் இருந்து வாகனங்கள் நேராக வடபழனிக்கு வந்தன. இன்று காலை 100 அடி சாலை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல வாகனங்கள் செல்கின்றன.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications